×

பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தல்

காளையார்கோவில், ஆக. 26:  காளையார்கோவில் வேளாண்மை உழவர் நலத்துறை காளையார்கோவில் வட்டார விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டாரத்தில் பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு காளையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்நாதன் கூறியதாவது, ‘‘பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்ட பயனாளிகள் நில ஆவணங்கள் சரி செய்ய மற்றும் (இகேஒய்சி) புதுப்பிக்க இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய் 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கி கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், நில உடமை ஆவணங்கள், ஏற்கனவே ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் ஆகியவைகளை எடுத்துச் சென்று அரசு பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ளலாம். வங்கி கணக்குடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்போது இணைத்துக் கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் 11வது தவணை வழங்கப்பட்டுள்ளது. 12வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் தமிழ் நிலம் இணையதளத்துடன்

ஒப்பீடு செய்து சரி பார்க்கும் முறைகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் தங்களது ஆவணங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து சரி பார்த்து கொண்டால்  மட்டுமே அடுத்த தவணை வழங்கப்படும் நிதி விடுவிக்கப்படும். இனிவரும் காலங்களில் ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள் மட்டுமே நிதி விடுவிக்கப்படும். ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்து விட வேண்டும்’’என்றார்.

Tags :
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்